1. Home
  2. தமிழ்நாடு

வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாராததால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது - ஜி.கே.வாசன் கவலை!

Q

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நெற்பயிர்கள் நீரில் முழ்கி விவசாயிகளை மிகுந்த கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தஞ்சையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால்கள் முறையாகத் தூர்வார்வாரப்படவில்லை.

அதனால் மழைநீர் வடியாமல் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர். ஆயிரக்கனக்கான ஏக்கர் சம்மா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களைக் காக்க உரிய நடவடிக்கையைத் தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டும்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவற்றிக்கு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like