பாதயாத்திரையால் தம்பி அண்ணாமலைக்கு வேண்டுமானால் சுகர் குறையும் : சீமான் கிண்டல் ..!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் படித்த இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் பவள விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-“ பத்தாண்டுகளாக நாட்டை கையில் கொடுத்து ஒன்றும் இல்லாமல் ஆக்கியாச்சு நடக்கறதுனால என்ன ஆகப்போகுது.
தம்பி அண்ணாமலைக்கு வேண்டுமானால் உடல்நலம் நல்லா இருக்கும், சுகர் குறையும், நடைபயணம் போனால் உடற்பயிற்சி செய்த மாதிரி இருக்கும். இதெல்லாம் ரொம்ப ஓல்டு மாடல் குஜராத் மாடல், திராவிட மாடல் மாதிரி ரொம்ப பழைய மாடல்.
மாநிலங்களவையிலும், மக்களவையிலும் தீர்மானம் ஏற்றுவதெல்லாம் சும்மா வேடிக்கையாக தான் இருக்கும் அதனால ஒன்னும் நடக்க போறது இல்லை”, என்றார்.