பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடி..!
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
பிராட்வே- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனிடையே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.