1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந் துயரத்திற்குக் காரணம் - பா.ரஞ்சித்..!

1

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 

இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்! என பதிவிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like