1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக இன்று மத்திய பட்ஜெட்டில் வாசித்ததற்கு நன்றி - ப.சிதம்பரம்..!

1

மத்திய பட்ஜெட் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வாசித்திருக்கிறது என்பதை இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். காங்கிரஸ் கட்சி, இந்த ஏஞ்சல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக வேண்டுகோள் விடுத்து வந்தது. இது தொடர்பாக மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 31வது பக்கத்தில் உள்ளதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டில், இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் என்ற திட்டத்தை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியதை வரவேற்கிறேன். இந்த திட்டம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 11வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில திட்டங்களையும் மத்திய நிதியமைச்சர் பயன்படுத்தியிருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன். அவர் தவறவிட்ட சில வாய்ப்புகளை விரைவில் பட்டியலிடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார்..


 


 

Trending News

Latest News

You May Like