1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு வழங்கும் சொந்த வீடு! யார் யாருக்கு கிடைக்கும்?

1

ஏழை மக்களுக்கு வீடு கட்ட உதவுவதற்காக மத்திய மோடி அரசு ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இதில் வீடு கட்டுவதற்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 1.0 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, 2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி 2.0 திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்க உதவி வழங்கப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடுகளை வழங்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். பலவீனமான வருமானக் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். சொந்த நிலத்தில் வீடு கட்ட அரசாங்கம் ரூ. 2.5 லட்சம் வழங்கும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்க உதவியுடன் கட்டுமான நிறுவனங்களால் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் கிடைக்கும். அரசால் கட்டப்படும் வீடுகளும் மிகக் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன்களுக்கு ரூ. 2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெறலாம்.

நகரங்களில் வசிக்கும் EWS, LIG ​​மற்றும் MIG குழுக்களைச் சேர்ந்த குடும்பங்கள் நிரந்தர வீடு இல்லாமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம். நகர்ப்புற திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். கடந்த 20 ஆண்டுகளில் ஏதேனும் வீட்டுவசதித் திட்டத்திலிருந்து உதவி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க முடியாது. நகர்ப்புறம் அல்லது கிராமப்புறம் இரண்டில் இன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

EWS: ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை
LIG: ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை
MIG: ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை

யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்?

விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எஸ்சி/எஸ்டி, சிறுபான்மையினர், பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் தெரு வியாபாரிகள், பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கைவினைக் கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சேரிகளில் வசிக்கும் அல்லது கட்டுமானத்தில் பணிபுரியும் மக்கள்இத்திட்டத்தில் வீடு வசதி பெறலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். “Apply PMAY-U 2.0" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களின் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் திட்டத்தின் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு எந்த மாதிரியான வீடு வேண்டும் என்பது குறித்து கேட்கப்படும். குடிசை வீடு அல்லது காரவீடு என எது வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். அடுத்து தகுதி சரிபார்ப்பைக் கிளிக் செய்ய வேண்டும். ஆதார் எண்ணையும் உங்கள் பெயரையும் உள்ளிட வேண்டும். அடுத்து OTP நம்பரை பதிவிட வேண்டியிருக்கும்.

விண்ணப்பப் படிவம்!

அடுத்து விண்ணப்ப படிவம் திறக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட, குடும்பம் மற்றும் வீட்டு விவரங்களை நிரப்ப வேண்டும். முகவரி, திட்ட விவரங்கள் மற்றும் வீட்டுக் கடன் தகவலைச் சேர்க்க வேண்டும். உங்கள் வருமான (EWS/LIG/MIG) வகையைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கான வருமானச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்பு மற்றும் முகவரி விவரங்களை நிரப்பி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்!

ஆதார் அட்டை (விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்)
வங்கி கணக்கு விவரங்கள் (கணக்கு எண், கிளை, IFSC குறியீடு)
வருமானச் சான்றிதழ் (PDF வடிவம், 100KB க்கும் குறைவாக)
நில ஆவணங்கள் (BLC விருப்பத்திற்கு மட்டும்)

Trending News

Latest News

You May Like