1. Home
  2. தமிழ்நாடு

இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து!

Q

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 8.25, 8.55, 10.20 மணிக்குப் புறப்பட்டு, தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை கடற்கரையிலிருந்து திருவள்ளூர் செல்லும் ரெயிலும், திருவள்ளூரிலிருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை கடற்கரை வரும் ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையிலிருந்து நாளை அதிகாலை 4.05 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 மணிக்குப் புறப்பட்டுத் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாகச் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 10.10, 10.40, 11.15 மணிக்குப் புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like