1. Home
  2. தமிழ்நாடு

விசாரணை ஓவர்...! காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த சீமான்..!

1

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது. ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்த விசாரணை நிறைவடைந்து சீமான் வெளியே வந்தார். அவரை அவர் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இதே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வேறொரு விசாரணை அதிகாரியிடம் மூன்று மணி நேரம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அதே கேள்விகள் தான் மீண்டும் கேட்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் விசாரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்றே நாள்களில் விசாரித்து முடிக்க காவல் துறையினர் முயற்சிக்கின்றனர்.

அழைப்பாணையை ஒட்டியபோது தடுத்தால் தான் குற்றம். ஒட்டிச் சென்றுவிட்ட பின்னர் கிழித்தோம். ஒட்டிச் சென்றது வளசரவாக்கம் காவல் துறை. கிழித்துவிட்டதாக வந்து கைது செய்ய வந்தது நீலாங்கரை காவல்துறை.என்னை கைது செய்து ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் அது நடக்காது” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like