1. Home
  2. தமிழ்நாடு

22.5 லட்சம் வீடியோக்கள் திடீர் நீக்கம்..!

1

யூடியூப் செயலி உலக அளவில் பல மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு ஏன் பிறந்த குழந்தைக்கு கூட யூடியூப்  தான் பிடிக்கிறது.

இந்த செயலியில் பல புதிய தகவல்கள் மற்றும் நம் பொழுதுபோக்கிற்கான பல வீடியோக்கள் என்று பல வகையான வீடியோக்க பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனினும் இது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் ஒரு செயலியாக இருக்கும் காரணத்தால் இந்த செயலியில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இதனை பின்பற்றாத வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கிவிடும்.

இதேபோல தான் தற்போது யூடியூப் நிறுவனம் 22.5 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது. இந்த தகவல் (Videos Removed From YouTube) மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யூடியூப் நிறுவனமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில் உலக அளவில் பல பயணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நம் இந்தியாவில் மட்டும் 46.2 கோடி பயனர்கள் யூடியூபை பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை உள்ள காலக்கட்டத்தில் வெளியான வீடியோக்களில் 22.5 கோடி இந்திய வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இதே காலகட்டத்தில் உலகம் முழுவதும் 90 லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like