1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தல் தான்... இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை!

1

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கியபோதே 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். 2026 சட்டசபை தேர்தலில் தான் கட்சி இறங்கும் என்று அறிவித்தார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தேர்தல் உள்ளிட்டவற்றில் அவரது கட்சி போட்டியிடவில்லை.

2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகர் விஜய் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் தனது கட்சி நேரடியாக 2026 சட்டசபை தேர்தலில் தான் களமிறங்கும் என்பதில் உறுதியாக உள்ளதால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் இருந்து விலகி உள்ளது. இதனால் தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி என்பது நிலவ வாய்ப்புள்ளது.

Trending News

Latest News

You May Like