1. Home
  2. தமிழ்நாடு

நம்மளுடைய அரசியல் பயணம் இன்னும் ஸ்ட்ராங்கான தைரியத்துடன் கண்டினியூ ஆகும் -பரபரப்பு வீடியோ வெளியிட்ட விஜய்..!

1

அனைவருக்கும் வணக்கம். என் லைப்ல இந்த மாதிரி ஒரு painful ஆன ஒரு சிச்சுவேஷனை நான் பேஸ் பண்ணது கிடையாது. மனசு முழுக்க வலி, வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்துல என்னென்ன மக்கள் பாக்க வராங்க? அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் அவங்க என் மேல வச்சிருக்கிற அன்பும் பாசமும். அந்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால தான் இந்த சுற்றுப் பயணத்துல மத்த எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களோட safety. அதுல எந்த காம்ப்ரமைஸ் ம் பண்ணிட கூடாது. ன்றதுக்காக தான் அது என் மனசுல ரொம்ப ஆழமா இருக்கும் அந்த எண்ணம். அதனால தான் இந்த அரசியல் காரணங்கள் எல்லாத்தையும் தவிர்த்துட்டு ஒதுக்கி வைச்சிட்டு, மக்களோட safety மட்டும் மைண்ட்ல வச்சுகிட்டு, அதுக்கான இடங்களை choose பண்றது, அதுக்கான இடங்கள பாத்து பர்மிஷன் கேக்கறது. இருங்கள். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல அத ரிக்வெஸ்ட் பண்ணி கேப்போம். ஆனா. நடக்கக் கூடாதது நடந்துருச்சு. நானும் மனுஷன் தானே. அந்த நேரத்துல அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எப்படி அந்த ஊரை விட்டுட்டு என்னால கெளம்பி வர முடியும். நான் திரும்ப அங்க போகணும்னு இருந்திச்சின்னா அத ஒரு காரணம் காட்டி அங்க வேற சில பதட்டமான சிச்சுவேஷன், வேற சில அசம்பாவிதங்கள். அந்த மாதிரி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு றதுக்காகத்தான் நான் அவாய்ட் பண்ணேன். இந்த நேரத்துல சொந்தங்களை இழந்து தவிக்கிற அத்தனை குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கறேன். எனக்கு தெரியும். என்ன சொன்னாலும் இது கிடையாதுதான் எனக்கு தெரியும். ஹாஸ்பிட்டல்ல ட்ரீட் பண்ணிட்டு இருக்குற எல்லாருமே சீக்கிரமா க்யூராயிடு வரணும்னு இந்த நேரத்துல நான் வேண்டிக்கறேன்.

கூடிய சீக்கிரமே. உங்கள் எல்லாரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்துல எங்களுடைய. வலிகளை. எங்களோட நிலைமைய புரிஞ்சுக்கிட்டு. எங்களுக்காக பேசுங்க. அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கறேன். கிட்டத்தட்ட ஒரு அஞ்சு மாவட்டத்துக்கு பிரச்சாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கலாம். ஆனா கருப்பொருளை மட்டும் ஏன் இப்படி நடக்குது? எப்படி நடக்குது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்காங்க. கல்லூரியை சேர்ந்த அந்த மக்கள் அந்த உண்மைய எல்லாம் வெளியில சொல்லும்போது எனக்கு கடவுளே நேர்ல வந்து இறங்கி அந்த உண்மைகளை எல்லாம் சொல்ற மாதிரி எனக்கு தோணுச்சு. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியிடப்படும். எங்களுக்கு தரப்பட்ட எடத்துல. நாங்க அப்போவே அந்த அந்த ஸ்பாட்லைட் ல இருந்து நாங்க பேசிட்டு வந்ததை தாண்டி எந்த தவறும் நீங்க செய்யல. நாங்க எதுவுமே செய்யல. இருந்தாலும் எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மேல எ. ஃபயர். அது மட்டும் இல்லை. சோஷியல் மீடியாவை சேர்ந்த நண்பர்கள், தோழர்கள் அவங்க மேல ஃபயர் எல்லாம் போட்டு பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. சி. எம் சார். உங்களுக்கு எதாவது இந்த பழிவாங்கனும் அப்படின்ற எண்ணமே ஏதாவது ஒரு பிரச்சனைனா. என்ன என்ன வேணாலும் பண்ணுங்க. அவங்க மேல கைய வைக்காதீங்க. நான் ஒன்னும் வீட்ல இருப்பேன். இல்ல நான் ஆபிஸ்ல இருக்கேன். என்ன என்ன வேணாலும் செய். நண்பர்களே தோழர்களே! நம்மளுடைய அரசியல் பயணம். இன்னும் ஸ்ட்ராங்கான. இன்னும் தைரியத்துடன் கண்டினியூ ஆகும்.



 

Trending News

Latest News

You May Like