1. Home
  2. தமிழ்நாடு

புதிய விதிமுறைகளை அறிவித்த ஆஸ்கர் தேர்வு குழு...!

1

உலக அளவில் ஆஸ்கர் விருதுகளுக்கென்ற தனி மரியாதை உண்டு. மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை பெறும் படங்கள் சிறந்த படங்களாகவும் அங்கீகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வு குழுவில் உள்ளவர்கள், பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படியென்றால், அனைத்து படங்களையும் பார்க்காமல், இத்தனை ஆண்டுகளாக எதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களை திரையரங்குகளிலோ, ஓடிடி தளங்களிலோ, திரைப்பட விழாக்களிலோ அல்லது ஆஸ்கர் விருதுக்கான தனிப்பட்ட திரையரங்கிலோ பார்க்கலாம்

.oscar

அப்படி பார்த்தவர்கள் தாங்கள் எங்கே அந்தப் படத்தை பார்த்தோம் என்பது உள்ளிட்ட தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள், குறும்படங்களுக்கு மட்டுமே இருந்த இந்த விதிமுறை தற்போது அனைத்து படங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 22-ம் தேதி நாமினேஷன் பட்டியல் வெளியாகும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like