சாமானிய மக்கள் ஷாக்..! இன்று முதல் ஒரு டீ-யின் விலை 15 ரூபாய்..!
(செப்டம்பர் 1) முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என சென்னை தேநீர் கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது ரூ.12-க்கு விற்கப்படும் ஒரு கப் தேநீரின் விலை, இனி ரூ.15 ஆக உயரும்.ரூ.15-க்கு விற்கப்படும் காபி, ரூ.20 ஆக அதிகரிக்கும்.இதேபோல, லெமன் டீ, பால், ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்ற பிற பானங்களின் விலைகளும் உயர உள்ளன.பார்சல் செய்யும் பானங்களின் விலையும் கணிசமாக உயர உள்ளது. ஒரு கப் பார்சல் தேநீர் ரூ.45 ஆகவும், காபி ரூ.60 ஆகவும் உயர உள்ளது.
பால், டீ மற்றும் காபி தூள், சர்க்கரை போன்ற மூலப்பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.எரிபொருள் விலை உயர்வால், மூலப்பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது.கடை வாடகை, மின்கட்டணம், மாநகராட்சி தொழில் வரி போன்ற செலவுகளும் அதிகரித்துள்ளன.
ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த செலவினங்களை சமாளிக்க, விலை உயர்வைத் தவிர வேறு வழியில்லை என்று தேநீர் கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
.png)