ஆர்டர் செய்தது சாம்பார் இட்லி..! வந்ததோ புழுவுடன் சாம்பார் இட்லி..!
திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது பிரபல அடையார் ஆனந்த பவன் உணவகம். இந்த உணவகத்திற்கு நேற்று திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சச்சின் (25) மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் (26) ஆகியோர் இரவு உணவு உண்பதற்காக சென்று ஹோட்டலில் அமர்ந்து சாம்பார் இட்லி 2 ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரின் பெயரில் ஓட்டலில் இருந்து கொண்டுவரப்பட்ட சாம்பார் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது சாம்பாரில் இருந்து வெளியே வந்த புழுவைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபொழுது, நாங்களும் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் தான் அமைதியாக சென்று விடுங்கள் என்று மிரட்டும் தோணியில் பேசியதுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல்துறையினர், உணவு ஆர்டர் செய்த சச்சின் மற்றும் வெங்கடேசனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர. இந்த நிலையில் வெங்கடேசன் சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற பொழுது உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முறையான பதில்களை கூறாமல் மிரட்டும் தூணியில் உணவக ஊழியர்கள் பேசியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.