1. Home
  2. தமிழ்நாடு

ஆர்டர் செய்ததோ பாலக் பனீர்.. வந்ததோ சிக்கன் பாலக்...

1

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டா மூலம் உணவகத்திலிருந்து சைவ உணவை ஆர்டர் செய்துள்ளார்.  அந்த உணவு அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது.  அதில் சிக்கன் துண்டு கிடந்ததை  பார்த்த அவர், அதனை இணையத்தில் பகிர்ந்தார்.

அவர் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்ததாவது, “நான் சொமேட்டாவில் பாலக் பனீர் சோயா மற்றும் தினை புலாவ் ஆர்டர் செய்திருந்தேன்.  அவர்கள் எனக்கு பாலக் பனீருக்குப் பதிலாக சிக்கன் பாலக்கை டெலிவரி செய்தனர்.  நான் சைவ உணவை மட்டுமே தேர்ந்தெடுத்திருந்த போது, ​​ சிக்கன் டெலிவரி செய்வதை ஏற்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

அவரின் உணவில் சிக்கன் இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.  இந்த இடுகை ஜூலை 28 பகிரப்பட்டது. இது ஏராளமான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது.  தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இவரின் இந்த பதிவிற்கு அவர் ஆர்டர் செய்த உணவகம் மற்றும் சொமேட்டோ நிறுவனம் அவருக்க மன்னிப்பு கோரியது.



 

Trending News

Latest News

You May Like