ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! இனி 10 நாட்களாவது ஆபீஸ் வரணும்..!

இன்போசிஸ் நிறுவனம் கொரோனா கால கட்டத்தில் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி அளித்தது. பிறகு தொற்று பரவல் குறைந்த நிலையில் வாரத்தில் 3 நாட்கள் அதாவது ஹைபிரிட் முறையில் வேலை செய்ய அனுமதி அளித்தது. இதற்கு மத்தியில் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தி அவர்கள் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.
இதனையடுத்து தற்போது அந்நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடபட்டுள்ளது. அதாவது கீழ்மட்ட ஊழியர்கள் மாதத்தில் குறைந்த பட்சம் 10 நாட்களாவது அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளது. தற்போது புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நவம்பர் 20ஆம் தேதி முதல் அலுவலக நாட்களை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.