ஆன்லைனில் துப்பாக்கிகள் ஆர்டர்.. ஆஸ்திரேலியா போலீசார் உதவியுடன் ஒடிசா இளைஞர் கைது !

ஒடிசாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்ததால் அதிகளவு இணையதளங்களை பார்த்து வந்தார். குறிப்பாக பிறநாடுகளின் வலைதளப்பங்கங்களை பார்வையிட்டு வந்துள்ளார்.
அப்போது ஆஸ்திரேலிய வலைதளம் ஒன்றில் பார்வையிட்டு வந்த இளைஞர் அதில் துப்பாக்கி விற்பனைக்கு இருந்ததை பார்த்துள்ளார். பின்னர் விளையாட்டாக அந்த வலைதளத்தில் துப்பாக்கிகளை டஜன் கணக்கில் ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆர்டர் தொடர்பாக மெயில்களையும் சம்மந்தப்பட்ட நிறுவனத்துடன் பரிமாரிவந்துள்ளார்.
ஆனால் துப்பாக்கி கிடைத்தால் ஆபத்து என்பதை உணர்ந்த இளைஞர் அந்த ஆர்டரை ரத்து செய்துள்ளார். இதனை பதிவு செய்த ஆஸ்திரேலிய புலானாய்வு அதிகாரிகள், இந்தியாவில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்தனர்.
மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளைஞரின் வீடு மற்றும் லேப்டாப்களை சோதனை செய்ததில் மாணவர் விளையாட்டுக்காக இதை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இளைஞருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் விடுவித்தனர். இனி இதுபோன்று விளையாட்டாக செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
newstm.in