அதிரடி உத்தரவு! இன்று முதல் கடற்கரைக்கு செல்லத் தடை!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் நேற்று பல்வேறு இடங்களில் 50% சதவீத மக்களுக்கு அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில்சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதித்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு மணல்பரப்பில் அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான தனித்தப் பாதையில் மட்டுமே அனுமதி என்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
newstm.in