அதிரடி உத்தரவு! வெளிநாட்டில் இருந்து வந்தால் தனிமை கட்டாயம்!!

இந்தியாவிற்கு வருகை தரும் அனைத்து சர்வதேச பயணிகளும் ஒரு வாரம் கட்டாய வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஆபத்தில் உள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கான மாதிரிகளை வரும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி சோதனை முடிவுகள் வந்த பிறகே அவர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். பரிசோதனை செய்தவர்கள் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவர்கள் வந்த எட்டாவது நாளில் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த சோதனையில் யாருக்கேனும், தொற்று பாதிப்பு உறுதியானால், அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து, தொற்று பாதிப்பு உறுதியானவர்களுக்கு தனிமைப்படுத்தலில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,17,100 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,52,26,386 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. இதுவரை 2,630 ஆக இருந்த ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இன்று 3,007 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1.199 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 377 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in