ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து கொலை!!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரீகன் (32) என்பவர் கொலை, கொள்ளை கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவார். தற்போது காவல் நிலையத்தில் இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரும் முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடியான அஜின் ஜோஸ் என்பவரும் நண்பர்கள். இருவரும் சுங்கான்கடை பகுதியில் உள்ள மதுக்கடையில் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு முறை மது அருந்தும்போது ரீகன், அஜினை மட்டம் தட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ரீகன் போதையில் பேசுவதாக எண்ணி சில நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்த அஜினுக்கு, நாளடைவில் கோபம் வர தொடங்கியது.
இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அஜின், தாம் ஒரு சிறந்து ரெளடி என்பதை நிரூபிக்க நினைத்துள்ளார். அதன்படி தனது நண்பரான ரீகனை கொலை செய்ய திட்டமிட்டர். அதற்காக மற்றொரு நண்பரான அசோக் என்பவரை கூட்டு சேர்த்துக் கொண்டார்.
கொலை செய்வதற்காக ஆன்லைனில் கத்தி ஒன்றையும் ஆர்டர் செய்து வரவழைத்தார். சம்பவத்தன்று வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு ரீகனை வரவழைத்த அஜின், அவருக்கு அதிசயமாக மது வாங்கி கொடுத்துள்ளார்.
பின்னர் ரீகனை வெளியில் கூட்டி சென்ற அஜின், தான் வைத்திருந்த கத்தியால் ரீகனின் கழுத்தை கறகறவென அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து அஜின் மற்றும் அசோக் ஆட்டோவில் தப்பினர்.
இதையடுத்து பிணமாக கிடந்த ரீகனை கண்ட ஒருவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ரீகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.
பின்னர் ரீகனின் நண்பரான அஜினயும், அசோக்கையும் கைது செய்து விசாரித்ததில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
newstm.in