9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! திருநெல்வேலிக்கு ரெட் அலெர்ட்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f2e8b3e7ec04b6f38e1958b09ca857bf.webp?width=836&height=470&resizemode=4)
திருநெல்வேலியில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. திருநெல்வேலி டவுனில் முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம், காட்சி மண்டபம், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்றும் (டிச.,13) திருநெல்வேலிக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.