இன்று 6 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' ..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c5e0a5b49d3e7095a4955b0a23e20e86.webp?width=836&height=470&resizemode=4)
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்), மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.10) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை (டிச.11) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதனால், புதன்கிழமை (டிச.11) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.11) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று (டிச.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.