பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் - ஓ.பி.எஸ்..!

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்.செய்திகளில் வெளியானது போன்று நான் பஞ்சமி நிலத்தை வாங்கவில்லை. பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை மாநில அரசின் நிதி மூலம் நிறைவேற்ற உத்தரவிட்டது ஜெயலலிதா தான். யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், இதற்காக இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா வைக்கப்பட்டது. எனவே, பல்வேறு கருத்துக்களை செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். விவாதங்களுக்கு எல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்சியில் மிகவும் மூத்த தலைவர் செங்கோட்டையன் தான். அ.தி.மு.க., ஒன்றாக இணைய வேண்டும் என்று மனசாட்சிப்படி இருப்பவர். ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். என்னை தோற்கடிப்பதற்காக, ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வத்தை கொண்டு வந்தார் ஆர்.பி., உதயகுமார். கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டார், இவ்வாறு அவர் கூறினார்.