தமிழக பாஜக நடத்தும் யாத்திரைக்கு எதிர்ப்பு! டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு!

தமிழகத்தில் பாஜக நடத்த உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய லீக் கட்சி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.
தமிழகத்தில் பாஜக பலப்படுத்த வரும் நவம்பர் 6 -ம் தேதி முதல் டிசம்பர் 6 -ம் தேதி வரை "வேல் யாத்திரை" நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனால், வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறுமா என பாஜக முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.