வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு… டிராக்டரை எரித்து போராட்டம்!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் டிராக்டருக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி இந்தியா கேட் முன்பு பஞ்சாப் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 5 இளைஞர்கள் ட்ராக்டர் ஒன்றை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 15-20 பேர் கொண்ட குழு, ட்ராக்டர் ஒன்றை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து, அதை இந்தியா கேட் முன்பு இறக்கி, தீ வைத்தனர்.
விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் இந்த மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் குறித்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,
போராட்டத்தில் ஈடுபட்ட மன்ஜோத் சிங்(36,ரமன்தீப் சிங் சிந்து(28),ராகுல்(23),சாகிப்(28),சுமித்(28)ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#WATCH: Punjab Youth Congress workers stage a protest against the farm laws near India Gate in Delhi. A tractor was also set ablaze. pic.twitter.com/iA5z6WLGXR
— ANI (@ANI) September 28, 2020
newstm.in