எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி !

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதேபோல் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவின் வழிக்காட்டுதல் குழுவில் யார்? யார் ?
- திண்டுக்கல் சீனிவாசன்
- எஸ்.பி.வேலுமணி
- தங்கமணிடி
- ஜெயக்குமார்
- சிவி சண்முகம்
- ஜேசிடி பிரபாகரன்
- காமராஜ்
- மனோஜ் பாண்டியன்
- மோகன்
- கோபாலகிருஷ்ணன்டி
- மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டுதல் குழுவில் உள்ளனர்.
இதனிடையே அறிவிப்பை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றனர்.
அங்கு மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். அங்கு முதல்வர் - துணை முதல்வர் ஆகியோர் மாறி மாறி சால்வை அணிவித்து கொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைவரும் கூடி ஆலோசனை நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது எனவும் கூறினார்.
newstm.in