முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்!!

 | 

முதல்வர் மு..ஸ்டாலினையும், திமுகவையும் பாமக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அந்த கட்சியின் சேலம் மாவட்ட  எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை பாராட்டி இருப்பது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு பாமக வெற்றி முடியாமல் போனதால் அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் மேடை தோறும் தனது கட்சி நிர்வாகிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிகழ்ச்சியில் பாமகவை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் பாமக மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வரை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்

stalin

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக எல்எல்ஏ அருள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று கூறினார்.

இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் குறைகளை எழுதி அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது என்று முதலமைச்சரையும் திமுக ஆட்சியையும் பாராட்டினார்.

stalin

இதே போல் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேசும் போது, கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினர்.

பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் நிலையில் முதலமைச்சரை பாமக எம்எல்ஏக்கள் பாராட்டியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP