1. Home
  2. தமிழ்நாடு

OPERATION SINDOOR : பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

1

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், 750-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர SAM ஏவுகணைகள், பரந்த அளவிலான ரேடார்கள் மூலம் இணைக்கப்பட்டு, இருமடங்கு வேகத்தில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோன்களை தடுப்பதை, இந்த வான் பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்ததாக தெரிவித்துள்ள ராணுவ அதிகாரிகள், இந்த நடவடிக்கை ட்ரோன் மேலாதிக்கத்தின் கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like