1. Home
  2. தமிழ்நாடு

Googleக்கு போட்டியாக களம் இறங்கிய OpenAI..?

1

 2022ன் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் 'ஜெனரேட்டிவ் ஏஐ' சாட்பாட்டை அறிமுகம் செய்தது. இது டிஜிட்டல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில் ChatGPT-ல் நிகழ்நேர தகவல்களை பெறும் வகையிலான தேடுதலை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது.


தற்போதைக்கு இதனை சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 'ப்ரிவியூ வெர்ஷன்' கடந்த ஜூலையில் SearchGPT என்ற பெயரில் மாதிரி வடிவமாக வெளியானது. அதனை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்த முடிந்தது.

முன்னணி உலக செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சாட்ஜிபிடி-யில் இணையதளத்தில் தேடும் வகையில் வடிவமைத்துள்ளதாக பிளாக் பதிவில் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்தது. பயனர்கள் தேடும் சோர்ஸ்களுக்கான லிங்க்குகள் மற்றும் செய்தி இணைப்புகள் இதில் இருக்கும் என்றும் ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.


இதோடு 'சாட்பாட்' தரும் தகவல்களும் இதில் இடம்பெறும். மொத்தத்தில் கூகுளுக்கு போட்டியாக இணைய உலகில் ஓபன் ஏ.ஐ., களம் கண்டுள்ளது. பயனர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இதன் 'ரீச்' இருக்கும். chatgpt.com மூலம் 'டெஸ்க்டாப்' மற்றும் மொபைல் செயலியில் இதனை பயன்படுத்தலாம்.


கூகுள் தேடுபொறி கேட்டதை எல்லாம் தேடித்தருவதால், நெட்டிசன்கள் 'கூகுள் ஆண்டவர்' என்று கூறுவது வழக்கம். சாட்ஜிபிடி, கூகுள் ஆண்டவரை வெல்லுமா, அடங்கிப்போகுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Trending News

Latest News

You May Like