எலான் மஸ்க்கின் ஆஃபரை திட்டவட்டமாக நிராகரித்த OpenAI..!

உலக பணக்காரரான எலான் மஸ்க் தற்போது ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எலான் மஸ்க், முதலீட்டாளர்கள் குழுவுடன் சேர்ந்து, 'ஓபன் ஏஐ' நிறுவனத்தை $97 பில்லியன் டாலருக்குத் தன்னிடம் விற்குமாறு அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை அணுகியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல ஏஐ தொழில்நுட் நிறுவனமான ஓபன்ஏஐ, அதன் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லும் வகையில் செயல்படுவதாக வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க், இப்போது அந்த நிறுவனத்தை வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எலான் மஸ்க், முதலீட்டாளர்கள் குழுவுடன் சேர்ந்து, ஓபன்ஏஐ நிறுவனத்தை $97 பில்லியன் டாலருக்கு தன்னிடம் விற்குமாறு அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை அணுகியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மஸ்கின் இந்த ஆஃபரை நிராகரித்த சாம் ஆல்ட்மேன், "வேண்டாம் நன்றி" என்று அவருக்கு பதிலளித்துள்ளார்.
மேலும் “OpenAl விற்பனைக்கு அல்ல.எங்கள் நிறுவனத்தை $97.4 பில்லியனுக்கு வாங்கிக்கொள்வதாக எலான் மஸ்க் அறிவித்த ஆஃபரை ஒருமனதாக நிராகரிக்கிறோம்" எனவும் இயக்குநர்கள் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைவர் பிரெட் டெய்லர் திட்டவட்டம்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திலேயே அதற்கான பதிலை பதிவிட்ட அந்நிறுவனம், ஓபன் ஏஐ விற்பனைக்கு அல்ல என்றும், தனது போட்டியை சீர்குலைக்கும் மஸ்க்கின் முயற்சியை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒருமனதாக நிராகரித்துவிட்டதாகவும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான ப்ரெட் டெய்லர் பதிவிட்டார். மேலும், எந்த ஒரு சாத்தியமான மறுசீரமைப்பும், ஏஜிஐ மூலம் லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மஸ்க்கிற்கு பதிலளித்த இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், வேண்டாம்.. நன்றி என தெரிவித்ததோடு, வேண்டுமானால் எக்ஸ் நிறுவனத்தை 9.74 பில்லியன் டாலர்களுக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என்று கூறி, மஸ்க்கை நக்கலடித்திருந்தார்.