மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!
தமிழ்நாட்டில் பிரபல சுற்றுலா தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பிரபலமானது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் வளைவுகள், மலைகள், அருவிகள், பாலங்கள், அடர்ந்த வனப் பகுதியை கடந்து ஊட்டி செல்கிறது. இதில் பயணிக்க பலரும் அதிகம் விரும்புவர். அவ்வப்போது மலை ரயில் பாதையில் மண், பாறைகள் சரிவு, பராமரிப்பு பணிகள் காரணமாக மலை ரயில் சேவை குறிப்பிட்ட நாட்கள் ரத்து செய்யப்படும். சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் மீண்டும் ரயில் இயக்கப்படும்.
இந்த நிலையில் நவம்பர் 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.