1. Home
  2. தமிழ்நாடு

அடடே... இது சூப்பர்ல... தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி..!

1

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற விவசாயி தனது 12 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைந்த தக்காளியை விற்று புதிய எஸ்யூவி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ராஜேஷ் தனது விவசாய நிலத்தில் தக்காளியை பயிரிட்டு, அவற்றை சாதாரண விலைக்கு விற்று வந்த நிலையில், இம்முறை நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது.

அவர் தக்காளி பயிர் இட்டபோது மிகக் குறைந்த விலையில் இருந்த தக்காளியின் விலை, அறுவடை செய்து சந்தைக்கு வருவதற்குள், விலை சுமார் 10 மடங்கு உயர்ந்தது. இது பல ஆண்டுகளாக ஏனோதானோ என விவசாயம் செய்து வந்த ராஜேஷை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கிட்டத்தட்ட 800 தக்காளி மூட்டைகளை விற்று, ஒரு மாதத்தில் ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும் அடுத்த சில மாதங்களுக்கு தக்காளியின் விலை இதேநிலையில் இருந்தால், ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் “கார்ப்பரேட் கம்பெனியிலோ அல்லது அரசு பணியிலோ இல்லாததால், விவசாயிகளுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. ஆனால், சரியான நேரம் வந்தால், அத்தகைய ஊழியர்களை விட விவசாயிகளும் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி வரன், விவசாயிகளை தேடி வரும் என்ற சூழலை தக்காளி உருவாக்கியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது படிப்பு வராத காரணத்தினால் பள்ளிப்படிப்பை துறந்து விவசாயத்தில் கடந்த எட்டு வருடங்களாக ராஜேஷ் ஈடுபட்டு வருகிறார்.தனது 12 ஏக்கர் விலை நிலத்தில் முழுவதுமாக தக்காளி பயிரிடப்பட்டுள்ள நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் தனது தோட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகலில் மட்டுமே தாங்கள் தூங்க முடிவதாக இவர் தெரிவித்துள்ளார்.

விவசாயி தக்காளியை விற்று 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வாங்கியதுடன் வீட்டை புதுப்பித்து திருமணத்திற்கு வரன்கள் தேடி வர தொடங்கியுள்ளதாக வெளியாகி உள்ள செய்திகள் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்பு நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை வேறு. ஆனால், தற்பொழுது நிலைமை முற்றிலுமாக வேறு. மூன்று வருடமாக விளைந்தது ஒரு கணக்கு, தற்பொழுது விளைந்துள்ளது வேறு கணக்கு என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like