அச்சச்சோ.. கொரோனாவின் புதிய திரிபு ஒமைக்ரான் XE இந்தியாவில் பரவியது !!
மிக வேகமாக பரவும் கொரோனாவின் புதிய திரிபு ஒமைக்ரான் XE இந்தியாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எக்ஸ் இ திரிபின் புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. அமெரிக்காவிலும் பெரும்பாலான பிஏ.2 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ (XE) எனும் புதிய மாறுபாடு, ஓமைக்ரானின் BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும். இது ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது மக்களிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான் XE மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
newstm.in