அச்சச்சோ! கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கக் கூடும்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா அதன்பிறகு வேகத்தை குறைத்துள்ளது.அந்த நேரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக உயிரிழப்பு 1000க்கும் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், மறுபடியும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படலாம் எனவும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கக் கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த அறிவிப்பால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளன.
newstm.in