1. Home
  2. தமிழ்நாடு

அடச்சீ..நீங்கெல்லாம் மனுஷங்களா ? ஆம்புலன்சில் ஆக்சிஜனை துண்டித்து கணவரை கொன்று பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

1

 உ.பியில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உள்ள தனது கணவரை பார்க்க பெண் ஒருவர் வந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், கணவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, தனியார் ஆம்புலன்சில் மனைவி அழைத்துச் சென்றார். அவர்களுடன் அவரது கணவரின் சகோதரரும் சென்றார்.இந்நிலையில், ஆம்புலன்ஸை பாதி வழியில் நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் உதவியாளரும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெண் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர்கள் கணவரின் ஆக்ஸிஜன் ஆதரவை துண்டித்து, ஆம்புலன்ஸில் இருந்து மூவரையும் வெளியே தள்ளினர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில், தலைமறைவான உதவியாளர் ரிஷப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like