1. Home
  2. தமிழ்நாடு

ஒரே அடி தான்.. ஒட்டகச்சிவிங்கியை கண்டு ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்.. வைரல் வீடியோ !

ஒரே அடி தான்.. ஒட்டகச்சிவிங்கியை கண்டு ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்.. வைரல் வீடியோ !


சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஒருசில வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் பேசப்படும். அதிலும் கூறிப்பாக காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த வனவிலங்கினங்களின் வீடியோக்கள் முக்கியத்துவம் பெறும்.

அந்த வகையில் காண்டாமிருகம் ஒன்று ஒட்டகக் சிவிங்கியிடம் அடிவாக்கி தப்பியோடும் வீடியோ பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. உலகின் மிக உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கிதான். 16 அடி முதல் 18 அடிவரை வளரக்கூடியவை.

அதேபோல்தான், பெரிய விலங்கு மட்டுமல்லாமல் அரக்க குணம் கொண்டது காண்டாமிருகம். அதன் உருவம், கொம்புவை பார்த்தாலே அச்சம் ஏற்படும். சுமார் 3000 கிலோ வரை எடை கொணட இந்த விலங்கினங்கள் இந்தியா, ஆப்பிரிக்கா, நேபாளம், பூடான், சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழ்கிறது.


ஆனால், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தாவின் ட்விட்டர் வீடியோவில், காண்டா மிருகம் ஒன்று வனப்பகுதியில் நின்றிருக்கும் ஒட்டகச்சிவியின் பின்புறம் சென்று அதனை தொடுகிறது.


உடனே ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகத்தின் முகத்தில் ஓங்கி பின்னங்காலால் உதைக்கிறது. திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன காண்டாமிருகம் ஒட்டகச்சிவிங்கி உடலைத் திருப்புவதற்குள் பயத்தில் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடுகிறது. இந்த வீடியோவை பலரும் நகைச்சுவையுடன் பகிர்ந்து வருகிறார்கள்.


newstm.in

Trending News

Latest News

You May Like