1. Home
  2. தமிழ்நாடு

இனி திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டும்தான் வேலை..!

1

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை (TTD) நிர்வகிக்க 24 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவை நியமித்தது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தலைவராக பிஆர் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உறுப்பினர்களில் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சுசித்ரா எல்லாவும் ஒருவர் ஆவார். இந்நிலையில் தேவஸ்தான தலைவரான பிஆர் நாயுடு, ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் NDA அரசாங்கத்தில் உள்ள மற்ற மாநிலத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்றும் அதுவே தனது முதல் முயற்சி என்றும் தெரிவித்தள்ளார். இதில் பல சிக்கல்கள் உள்ளன என்று கூறிய பிஆர் நாயுடு, அதை நாம் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மற்ற மதங்களைச் சேர்ந்த ஊழியர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆந்திரப் பிரதேச அரசுடன் ஆலோசிப்பதாகவும் நாயுடு மேலும் கூறினார். அவர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை (விஆர்எஸ்) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து அல்லது பல்வேறு துறைகளுக்கு அவர்களை மறுசீரமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like