1. Home
  2. தமிழ்நாடு

ஒரே ஒரு நொடி தான்... சாகச நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்... டிராக்டரில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..!

1

பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தின் ஃபத்தேகர் சுரியன் தொகுதியில், சார்சூர் கிராமத்தில் உள்ளூர் பொருட்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 29 வயதான சுக்மந்திப் சிங் என்பவர், ஓடும் டிராக்டரில் ஏறும் சாகச நிகழ்ச்சியை செய்ய முயன்றார். ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் ஒரு சக்கரத்தின் மீது காலை வைத்து, டிராக்டரில் ஏறி, பின்னர் அதனை நிறுத்துவது, சாகச நிகழ்சியின் முக்கிய அம்சமாகும்.

இதற்காக சுக்மந்திப் டிராக்டரில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக, அங்கிருந்த சேறு காரணமாக டிராக்டரின் சக்கரத்தில் அவரது கால் சிக்கியது. இதையடுத்து அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனிடையே இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like