திருமணமான 44 நாட்களில் வெறும் 6 முறை தான்...விவாகரத்து கேட்கும் மனைவி…!
ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் செயலால் அதிருப்தியடைந்து, போலீஸில் வரதட்சணை சித்ரவதை புகார் அளித்ததுடன், விவாகரத்து கேட்டும் முறையிட்டுள்ளனர். அப்போது, சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையில் விவாகரத்துக்கு காரணம் வரதட்சணை கொடுமையல்ல.. அதை விடவும் பெரிய கொடுமையான விஷயம் எனத் தெரிய வந்துள்ளது.
தனது கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், தினமும் குளித்துச் சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை ஏற்க மறுப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளா. மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டு, தூய்மையடைந்து விட்டதாகவும், திருமணமான 40 நாட்களில் வெறும் 6 முறைதான் அவர் குளித்து இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணவன் – மனைவியைக் குடும்பல நல ஆலோசனை மையத்தில் ஒரு வாரம் கவுன்சிலிங் பெற போலீசார் அனுப்பி வைத்தனர்.