1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலை செல்ல ஆன்லைன் க்யூ டோக்கன்.. முன்பதிவு செய்வது எப்படி..?

சபரிமலை செல்ல ஆன்லைன் க்யூ டோக்கன்.. முன்பதிவு செய்வது எப்படி..?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக ஆன்லைன் க்யூ முறை மூலம் டோக்கன் முன் பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் க்யூ முறையில் முன்பதிவு செய்து வழிபாட்டிற்கான டோக்கனை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

சபரிமலை செல்ல ஆன்லைன் க்யூ டோக்கன்.. முன்பதிவு செய்வது எப்படி..?
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 16ம் தேதியில் இருந்து இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டன. தினமும் 30 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் இங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆன்லைன் அனுமதி அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசனம் மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இது கொரோனா பரவலை ஏற்படுத்தாமல் இருக்கும் வண்ணம் இந்த ஆன்லைன் க்யூ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் இன்றி எளிதாக தரிசனம் செய்யவும், பிரசாதம் வாங்கவும் வசதியாக தேதி, நேரம் வாரியாக ஆன்லைன் க்யூ உருவாக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Sabarimala Ayyappa temple to open on Oct 16 for 'Thula masam' poojas |  India News,The Indian Express
கடந்த சில நாட்களாக மழை காரணமாக கூட்டம் குறைந்த நிலையில் மீண்டும் அங்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்திருக்கும் ஆன்லைன் க்யூ முறையில் முன்பதிவு செய்து வழிபாட்டிற்கான டோக்கனை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

பின் வரும் வழிமுறைகளை பின்பற்றினால் சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாட்டிற்கான ஆன்லைன் க்யூ டோக்கனை எளிதாக பெற முடியும்.

1 - https://sabarimalaonline.org/#/login என்ற சபரிமலை கோவிலின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லுங்கள்.

2 - இந்த பக்கத்தில் சைன் அப் செய்ய வேண்டும். இதில் உங்கள் பெயர், போன், போட்டோ, மெயில் ஐடி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இந்த விவரங்களை இதில் பதிவேற்றி உங்கள் கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஓடிபி பரிசோதனை செய்யப்படும். பின் நீங்கள் பதிவு செய்த அந்த மெயில் ஐடி, பாஸ்வேர்டை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பக்கத்தில் லாக் இன் செய்ய முடியும். இதுதான் கணக்கில் உள்ளே செல்லும் முறை.

3 - லாக் இன் செய்து உள்ளே நுழைந்ததும், அதில் மேல் பக்கத்தில் Virtual Q (விர்ச்சுவல் க்யூ) என்ற பகுதி இருக்கும். இதில்தான் நீங்கள் தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கனை பெற வேண்டும். இதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதில் நீங்கள் தனிப்பட்ட வகையில் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ, அல்லது குழுவாகவோ செல்ல டோக்கன் பெற முடியும்.

4 - தனி டிக்கெட்டா, குழு டிக்கெட்டா என்பதை தேர்வு செய்துவிட்டு Add pilgrim ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு பக்தரின் பெயர், போட்டோ, ஐடி கார்டு, தொலைபேசி எண், விலாசம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். போட்டோவை அப்லோட் செய்த பின் ஓகே கொடுக்க வேண்டும். எத்தனை பேர் செல்கிறீர்களோ எல்லோருக்கும் இந்த விவரங்களை கொடுக்க வேண்டும்.

5 - இதன் பின் அடுத்த பக்கத்தில் தேதி, நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இதில் எந்த தேதியில் தரிசனம் செய்ய முடியுமோ அந்த தேதி, நேரம் மட்டுமே காட்டும். அந்த தேதிகளை முன்கூட்டியே புக் செய்ய வேண்டும். இந்த தேதிகளை தேர்வு செய்து விஷ் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும்.

6 - அதே பக்கத்தில் தேவசம் போர்டு வழங்கும் பிரசாதங்களை முன்கூட்டியே புக் செய்து கொள்ளலாம். இதற்கான பணத்தையும் ஆன்லைன் மூலம் நீங்கள் செலுத்த முடியும். இதற்கு பின் விஷ் லிஸ்ட் பகுதியை கிளிக் செய்தால் உங்கள் ஆன்லைன் Virtual Q கூப்பன் உருவாகும். க்யூ ஆர் கோடோடு இந்த இருக்கும் இந்த டோக்கனை பயன்படுத்தி நீங்கள் சபரிமலை கோவிலுக்கு குறிப்பிட்ட தேதியில் தரிசனம் செய்ய செல்லலாம்.

6 - நீங்கள் Virtual Q டோக்கன் புக் செய்த விவரம் உங்கள் போன் எண்ணுக்கும் வரும். சபரிமலை பக்கத்தின் my profileல் இருக்கும் கூப்பனையும் நீங்கள் பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.

Trending News

Latest News

You May Like