1. Home
  2. தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு!எப்படி  புக் செய்வது?

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு!எப்படி  புக் செய்வது?


நாளை புரட்டாசி மாதம் துவங்க இருக்கிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் விஷ்ணு ஆலயங்களில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் வழிபாட்டிற்கு  சனிக்கிழமைகளில்  வரும் பக்தா்கள் ஆன்லைன் முன்பதிவு செய்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், அதிக பக்தா்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாகவும்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி   புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய காலை 6.30 - 8 மணி வரை, 8 - 10 மணி வரை, 10 - 12 மணி வரை, 12 - 2 மணி வரை, 2- 4.30 மணி வரை, மாலை 6 - 8 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பக்தா்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.srirangam.org ல் முன் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.

newstm.in

Trending News

Latest News

You May Like