1. Home
  2. தமிழ்நாடு

கடுமையாக உயரும் வெங்காய விலை.. பதுக்கல் காரர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை.. திட்டம் இதுதான் !

கடுமையாக உயரும் வெங்காய விலை.. பதுக்கல் காரர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை.. திட்டம் இதுதான் !


வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வரும் காரணத்தினால், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்கள் கடைகளில் இருப்பு வைப்பதற்கான வெங்காய அளவை மத்திய நுகர்வோர் இலாகா அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள அளவை மீறி இருப்பு வைத்தால் வெங்காய வியாபாரிகள் மீது கருப்புச் சந்தை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் நுகர்வோர் விவகார இலாக்கா செயலாளர் லீனா நந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டத்தின்படி, வெங்காயம் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அத்துடன் கடைகளில் வெங்காயம் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

ஆனால் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய சில நாட்களிலேயே புதிய சட்டத்தை அமல் படுத்தவேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நுகர்வோர் விவகார இலாக்கா செயலாளர் லீனா நந்தன், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காய இருப்புக்கான அளவுகளை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, மொத்த வியாபாரிகள் கையில் 25 மெட்ரிக் டன்கள் வெங்காயம் இருப்பு வைத்துக்கொள்ளலாம். சில்லரை வியாபாரிகள் 2 மெட்ரிக் டன்கள் வெங்காயம் மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

1 கிலோவுக்கு 25 ரூபாய் 87 பைசா என்ற விலையில் இருந்து இப்பொழுது 1 கிலோ விலை 55.60 பைசாவாக வெங்காயம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு 114.96சதவீதமாகும் எனவும், சட்டப்படி இந்த விலை உயர்வின் அடிப்படையில் இருப்பு அளவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று லீனா நந்தன் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய அரசு 1 லட்சம் மெட்ரிக்டன் வெங்காயம் இருப்பு வைத்துள்ளதாகவும், கரிப் பருவ கால வெங்காய விளைச்சல் விரைவில் பொது சந்தைகளுக்கு வந்து சேரும். அதுவரை பொது சந்தைகளுக்கு வெங்காயத்தை தொடர்ந்து மத்திய அரசு விடுவித்து வரும் என கூறினார். அதேநேரத்தில் வெங்காய இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

கடுமையாக உயரும் வெங்காய விலை.. பதுக்கல் காரர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை.. திட்டம் இதுதான் !

இருப்பு அளவுகளை மீறி கூடுதலாக வெங்காயம் இருப்பு வைக்கும் வியாபாரிகள் மீது கருப்புச் சந்தை தடுப்பு, அவசிய சட்ட பொருள் வினியோகம் பராமரித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான 1980ம் ஆண்டு சட்டத்தின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருகிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. எனினும் வெளிநாடுகளில் இருந்து வரும் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like