புது ஜோடிகளுக்கு திருமணத்தில் வெங்காயம் பரிசு! ருசிகர சம்பவம்!!

வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயத்தை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
வெங்காயத்தை வாங்கி வங்கி லாக்கரில் தான் வைக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு அதன் விலை எகிறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
ஏற்கனவே, கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெங்காயம் விலை உயர்வு மேலும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். விலை உயர்வை உணர்த்தும் வகையில் வெங்காயத்தை பரிசாக வழங்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
newstm.in