”ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்..!
தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
“பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்க ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப் பயிர் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய ரூபாய் 12 கோடி மானியம் வழங்கப்படும்.
விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.
நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.
சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூபாய் 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2024- 2025 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூபாய் 20.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023- 2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றிற்கு ரூபாய் 215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.