1. Home
  2. தமிழ்நாடு

ஒரேயொரு முறை டெபாசிட்..! மாத மாதம் ரூ.20,000 வருமானம்..!

1

அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒய்வூதிய திட்டமிடலுக்கான முக்கியமான ஒன்று. இத்திட்டம் அரசு முழுக்க முழுக்க செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானம் இத்திட்டத்தின் வாயிலாக கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த வருமானத்தை பெற முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்லாமல் வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் முதலீடு செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வரை வட்டி கிடைக்கும். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,250 வருமானமாக பெறுவதற்கு ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யும் போது, ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டி கிடைக்கும்.

இதன் மூலமாக மாத மாதத்திற்கு ரூ.20,500 வருமானம் பெறலாம். காலாண்டிற்கு ரூ.61,500 வருமானமாக கிடைக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு SCSS திட்டம் எனவும் அசிக்கப்படுகிர்த்து. 5 ஆண்டுகள் முதிர்வடையும் கால அளவினை கொண்டது இத்திட்டம். இதில், மாத மாதம் முதலீடு செய்வதற்கு பதிலாக, ஒருமுறை மட்டும் கூட பணத்தை முதலீடு செய்யும் வசதி உண்டு.

SCSS திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகன் யாராக இருப்பினும் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்தும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் மூதலீட்டிலும் இந்த திட்டத்தை துவங்கலாம். டெபாசிட் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டி ஆகியவற்றை இத்திட்டத்தில் பெறலாம். பிரிவு 80C ன் படி SCSS திட்டத்தில் வரி விலக்கும் உண்டு. 

Trending News

Latest News

You May Like