1. Home
  2. தமிழ்நாடு

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்! உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது!

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்! உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது!


நாடு முழுவதும் ஒரு பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது ' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.மேலும் ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றி நடப்பு பிரச்சனைகளுக்கேற்ப ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரே பணி செய்து ஓய்வு பெறுபவர்கள் அந்த வருடத்தின் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றாலும், ஒரே மாதிரியான ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும், பொருளாதார சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உடனடியாக அதில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றங்களும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் ராணுவ அமைச்சகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like