1. Home
  2. தமிழ்நாடு

வயிற்றில் இருக்கும் புழுக்களை விரட்ட ஒரு பப்பாளி போதும்..!

1

உடலில் குடல் ஒட்டுண்ணிகளான ஊசிப்புழுக்கள், நாடாபுழுக்கள், வட்டப்புழுக்கள் போன்றவை செரிமான அமைப்பில் வாழக்கூடியவை. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, செரிமான கோளாறுகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுத்தும். இவை அசுத்தமான உணவு, அசுத்தமான நீர், மோசமான சுகாதாரம் போன்றவற்றால் உடலுக்குள் நுழைகிறது. இவை தவிர பாதிக்கப்பட்ட நபர்கள், குழந்தையின் மலத்தை தொட்டு சரியாக கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது, விலங்குகளுடன் தொடர்பு கொள்வது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த குடல் ஒட்டுண்ணியை வெளியேற்ற பப்பாளி விதைகள் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று, பப்பாளி விதைகள் ஒட்டுண்ணிகளை வெளியேற்றுகிறது என்பதை ஆதரிக்கும் வகையில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. 

குடல் ஒட்டுண்ணிகள் செழித்து வளரும் இடம் செரிமான பாதையாகும். மனித குடலில் புழுக்கள் செழித்து வளர அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட சூழல் தேவை. செரிமானம் சீராக இல்லாமல் நச்சுப்பொருள்கள் குவியும் இடத்தில் அவை செழித்து வளர்கிறது. இதற்கு இடம் கொடாமல் ஜீரணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது அவை உயிர்வாழ முடியாது. பப்பாளி விதைகள் செரிமான பாதையில் இருக்கும் நச்சுக்களை ஜீரணிக்க செய்கின்றன. நச்சு இல்லாத இடத்தில் புழுக்கள் செழித்து வளர முடியாது அதனால் புழுக்கள் அகற்றப்படுகின்றன.


பப்பாளி விதைகள் சில வகையான பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோதனைக்குழாய் ஆய்வின் படி பப்பாளி விதை சாறு மூன்று வகையான பூஞ்சைகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்தது. இதில் ஈஸ்ட் தொற்றுகளை ஏற்படுத்துவதற்கு காரணமான குறிப்பிட்ட நோய்க்கிருமியும் அடங்கும்.


மற்றொரு ஆய்வில் உலர்ந்த பப்பாளி விதைகள் மற்றும் தேனில் இருந்து தயாரிக்கப்பட்ட பானம் குடித்தவர்களுக்கு ஒட்டுண்ணிகளை கொல்வதில் கணிசமாக பயனுள்ளதாக இருந்தது கண்டறியப்பட்டது. அதே நேரம் பப்பாளி விதைகளை சாப்பிடுவது மனிதர்களில் பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகளை எப்படி பாதிக்கலாம் என்பதை தீர்மானிக்க ஆய்வுகள் தேவை.

பப்பாளி விதைகள் எப்படி எடுப்பது?

  • பப்பாளிப்பழத்திலிருந்து விதைகளை எடுத்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
  • பிறகு அதை சுத்தமான நீரில் துடைத்து வைக்கவும்.பிறகு அதை உலர வைத்து அப்படியே சாப்பிடலாம். சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
  • பொடியாக்கி எடுத்துகொள்ளலாம்.
  • ஆரம்பத்தில் மிக குறைந்த அளவு சேர்க்கவும்.
  • சாலட்டில் பொடியாக இலேசாக தூவலாம்.
  • ஸ்மூத்தி சாலட் போன்றவற்றில் சேர்க்கலாம்.
  • நீரில் சேர்த்து குடிக்கலாம்.
  • குழந்தைகளுக்கு சிட்டிகை பொடியை தேனில் கலந்து கொடுக்கலாம்.
  • படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தொடர்ந்து 2 நாட்கள் கொடுத்தால் போதும். ​

பப்பாளி விதைகளில் சிறிய அளவு தீங்கு விளைவிக்கும் இராசயனமான சயனைடு உள்ளது. அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துகொண்டால் இது செரிமான கோளாறை உண்டு செய்யலாம்.
அதிக அளவுகள் உட்கொள்வது பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம். மிதமாக எடுத்துகொள்வதன் மூலம் இதை தடுக்க முடியும்.


பப்பாளி விதைகள் ஆரோக்கியமானவை இவை வயிற்றில் இருக்கும் ஒட்டுண்ணிகளை அழிப்பதோடு சிறுநீரக பாதுகாப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடியவை. ஆனால் மருந்தாக இதை சாப்பிடும் போது இதை எப்படி எவ்வளவு அளவில் எவ்வளவு காலம் என்பதை மருத்துவரை அணுகி எடுத்துகொள்வது பாதுகாப்பானது.

Trending News

Latest News

You May Like