டிஜிபி சங்கர் ஜிவால் இடத்தை நிரப்ப இந்த மூவரில் ஒருவர் வர வேண்டும் - சவுக்கு சங்கர்..!

வரும் 31.08.2025 அன்று ஓய்வு பெறுகிறார் தமிழகத்தின் காவல்துறை இயக்குநராக (DGP) இருப்பவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ். எனவே அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுகிறது. இதில் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை சிக்கலுக்கு ஆளாகி வருகிறது. அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த சூழலில் தான் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில், சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இடத்தை நிரப்ப சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ராத்தோர் ஆகிய மூவரில் ஒருவர் வர வேண்டும். இவர்களில் யார் வந்தாலும் 2027 ஜூன் வரை பதவியில் இருப்பர். அதாவது சட்டமன்றத் தேர்தல் காலத்தில் டிஜிபியாக இருப்பார். எனவே இவர்களில் இருந்து யாரும் காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கு வரவிடாமல் செய்ய வேண்டும்.
சங்கர் ஜிவாலுக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு கொடுக்கலாம். அதன்படி பிப்ரவரி 2026 வரை காவல்துறை தலைமை இயக்குநர் பதவியில் இருப்பார். ஜனவரி 2026ல் 1994 மற்றும் 1995 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெறுவர். அப்படி பதவி உயர்வு பெறுபவர்களில் டேவிட்சன் தேவாசிர்வாதமும் ஒருவர்.
இவரை உளவுத்துறையின் இயக்குநராக நியமித்து, கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கொடுக்கலாம். முன்னதாக அதிமுக ஆட்சி காலத்தில் ராமானுஜம் மற்றும் அஷோக் குமார் ஆகியோருக்கு உளவுத்துறை டிஜிபி நியமனம் செய்து, கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கொடுத்த முன்னுதாரணங்கள் உண்டு.
இந்த திட்டத்தை வகுத்திருப்பது முதல்வரோ, துணை முதல்வரோ அல்ல. ஆறு பேர் கொண்ட குழு அதிகாரிகளே. இவர்களை பொறுத்தவரை சீமா அகர்வாலோ, ராஜீவ் குமாரோ, சந்தீப் ராய் ராத்தோரோ தமிழக டிஜிபியாக வரக்கூடாது. இந்த திட்டம் நடக்காது என்று நினைக்க வேண்டாம். பொம்மை முதல்வர் இருக்கும் போது ஏன் நடக்காது? என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் ?
— Savukku Shankar (@SavukkuOfficial) April 1, 2025
தமிழகத்தின் காவல்துறை இயக்குநராக இருக்கும் சங்கர் ஜிவால் வரும் 31.08.2025 அன்று ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு அடுத்து (1) திருமதி சீமா அகர்வால், (2) திரு. ராஜீவ் குமார் மற்றும் (3) திரு. சந்தீப் ராய் ராத்தோர் ஆகிய மூவரில் ஒருவர் தலைமை இயக்குநர்… pic.twitter.com/oq2N55JmF1