கார் டிரைவர் சொன்ன வார்த்தையால் தலை தெறிக்க ஓடிய அமைச்சர் !!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். நடந்த நிகழ்ச்சியில் , அவருடன் கலெக்டர் கந்தசாமி , ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை முடித்து , சொந்த ஊரான ஆரணி அடுத்த சேவூருக்கு , அமைச்சர் காரில் சென்றார். போளூரை கடந்தபோது, அமைச்சரின் கார் டிரைவருக்கு போன் வந்து உள்ளது. அதில் பேசியவர் ; உங்களுக்கு நடந்த பரிசோதனையில் , கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது; உடனடியாக ,
ஆரணி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என, தெரிவித்துள்ளார்.இதை, அமைச்சரிடம் டிரைவர் கூற , அதிர்ந்த அமைச்சர் , உடனடியாக காரை நிறுத்தும்படி கூறி இறங்கி, அலறியடித்து துாரமாக ஓடினார்.
பின், கட்சி பிரமுகர் காரில் ஏறி வீட்டிற்கு சென்றார்.இந்த தகவலால், அமைச்சர் மற்றும் அரசு விழாவில் பங்கேற்ற அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Newstm.in