1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்: உதயநிதி ஸ்டாலின்!

1

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும். பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் – முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like